ஜெயலலிதா விடுதலையை வலியுறுத்தி தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டம்.

private busதமிழகம் முழுவதும் இன்று தனியார் பஸ்கள் ஓடாது என்று பஸ் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகமெங்கும் அறநிலை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தனியார் அமைப்புகள், பொதுநல சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்களும் அறப்போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக மக்களின் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் பேருந்துகள் இயங்காது.

மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடைபெறும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பஸ்கள் ஓடாது. தமிழகத்தில் 6 ஆயிரம் தனியார் பஸ்கள் உள்ளன. 2 ஆயிரம் பஸ் ஆபரேட்டர்கள் இந்த அறப்போராட்டத்தில்  பங்கேற்கிறார்கள்” கூறியுள்ளார்.

Leave a Reply