Rதெலுங்கு பட இயக்குனர் தற்போது ‘சாவித்ரி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூன்று வித போஸ்டர்களை நேற்று அவர் வெளியிட்டார். இந்த போஸ்டர்கள் ஆந்திராவில் பெரும் புயலை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் போஸ்டரில் பெண் ஒருவர் கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவரை ஜன்னலில் வழியாக ஒரு சிறுவன் எட்டிப்பார்ப்பது போல் உள்ளது. இன்னொரு போஸ்டரில் ஆசிரியை ஒருவரின் இடுப்பை சிறுவன் உற்று பார்ப்பது போல் உள்ளது. மற்றொரு போஸ்டரும் படுகிளாமராக உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராம்கோபாவர் வர்மா, “நான் 10 வயதில் பார்த்த இங்கிலீஷ் டீச்சர்தான் இந்த படத்தின் சாவித்திரி கேரக்டர். 10 வயதில் எனக்கு கிடைத்த சாவித்திரிபோல் உங்கள் வாழ்க்கையிலும் பல சாவித்திரிகள் கிடைபார்கள்” என்று கூறியுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும், சாவித்ரி படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி ஐதராபாத் நகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புனிதமான ஆசிரியர் தொழிலை அவமதித்ததுடன், சிறு குழந்தைகளின் மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தும் என கூறி குழந்தைகள் நல அமைப்பு ராம்கோபால் வர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராம்கோபால் வர்மா மீது ஐ.பி.சி 292 என்ற பிரிவின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.