கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் திடீரென சக வீரர்கள் 5 பேர் மீது துப்பாக்கியால் சுட்டதால் 3 வீரர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி சுட்டத்தில் 3 சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் பலியாகி உள்ளனர். சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது சகவீரர்களுடன் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றி பாதுகாப்பு அதிகாரி வி.பி.சிங் என்பவர் திடீரென தனது துப்பாக்கியால் 5 வீரர்களை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கணேசன், சுப்புராஜ், மோகன் சிங் ஆகிய 3 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 2 வீரர்கள் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரி வி.பி.சிங்கை கல்பாக்கம் போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் நேற்றுநேரில் ஆய்வு செய்தார். அதன்பின் இந்த சம்பவம் குறித்து அவர் கூறும்போது, “விஜய பிரதாப் சிங் துப்பாக்கியால் 20 ரவுண்டுகள் சுட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் இறந்த கணேசன் சேலத்தையும், சுப்புராஜ் விருதுநகரையும் சேர்ந்தவர்கள்” என்றார்.