இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம். சென்னையில் இன்று பார்க்கலாம்

moon ecilipseஇந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை சென்னை உள்பட பல நகரங்களில் இன்று பார்க்கலாம்

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி முழு சந்திர கிரகணம் இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு தொடங்கி  இரவு 7.05 மணிக்கு நிறைவடைகிறது. மேலும் முழுமையான கிரகணம் மாலை 4.24 மணி முதல் 4.54 மணி வரை நிகழும் என்று மும்பை நேரு கோளரங்கத்தின் இயக்குநர் அர்விந்த் பராஞ்பே அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாலை 5.54 மணி முதல் 11 நிமிடங்கள் வரை இன்று நிகழும் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும்.

சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, ஆகம விதிகளின்படி திருப்பதி ஏழுமலையான் கோயில்  நடை காலை 10 மணிக்கு  சாத்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு இரவு 10.30 மணியிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் சந்திர கிரகண நேரத்தில் ‘சிவ நம, அம் தம், நசி மசி” என்ற மந்திரத்தை மனதில் ஜபித்தால் பெரும் நன்மை ஏற்படும் என ஆன்மீகப்பெரியோர்கள் கூறியுள்ளனர். மேலும் சந்திர கிரகண நேரத்தில் உணவு எதையும் சாப்பிடாமல் இருப்பது நலம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply