சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு கவர்ச்சி நடிகை மாயா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பல தமிழ்த் திரைப்படங்களில் கவர்ச்சிக் குத்தாட்டங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை மாயா. இவர் நேற்று தனது மகள் குணப்பிரியாவுடன் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி கோஷம் போட்டுக்கொண்டிருந்த மாயா, திடீரென தன்னுடைய சேலையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றித் தீ வைக்க முயற்சி செய்தார்.. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து அவரை கைது செய்துவிடுவதாக எச்சரித்தனர்.
. “”அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும்” என்று கோஷம் போட்டபடி இருந்த மாயாவை போலீஸார் வேப்பேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரையும், அவரது மகளையும் எச்சரித்து அனுப்பினர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1ndvj99″ standard=”http://www.youtube.com/v/NM09K0MwcHU?fs=1″ vars=”ytid=NM09K0MwcHU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep7233″ /]