இந்திய அரசின் மகாரத்னா நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆலையின் (Steel Authority of India Limited) மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் செயல்பட்டு வரும் Chandrapur Ferro Alloy Plant ஆலையில் காலியாக உள்ள Operator Cum Technician-Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Operator Cum Technician-Trainee
மொத்த காலியிடங்கள்: 25
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிரிவு: Mechanical – 07
பிரிவு: Metallurgy – 08
பிரிவு: Electrical – 05
பிரிவு: Instrumentation – 02
பிரிவு: Chemical-03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணி: Attendant Cum Technician – Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிரிவு: Welder – 07
பிரிவு: Turner – 07
பிரிவு: Fitter – 16
பிரிவு: Electrician – 10
பிரிவு: Motor Vehicle Mechanic – 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 18 – 28க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 2 வருடங்கள். பயிற்சியை வெற்றிக்கரமாக முடிப்பவர்களுக்கு S-1 & S-3 கிரேடில் பணி வழங்கப்படும். பணியின்போது ஒரு வருடம் பயிற்சி பணியாக கருதப்படும்.
சம்பளம்: பயிற்சியின்போது Attendant Cum Technician (Trainee)க்கு முதல் வருடம் மாதம் ரூ.8,600 மற்றும் இரண்டாம் வருடம் மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
அதன்பின்பு S-1 கிரேடின் படி ரூ.15,830 – 22,150 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
Operator Cum Technician (Trainee)க்கு முதல் வருடம் மாதம் ரூ.10,700 மற்றும் இரண்டாம் வருடம் மாதம் ரூ.12200 வீதம் வழங்கப்படும். அதன் பின்பு S-3 கிரேடின் படி மாதம் ரூ,800 – 24,110 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.10.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.