உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க், இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். சமூக வலைதளங்கள் மூலம், தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை தடுத்த நிறுத்துவது குறித்து பிரதமர் மோடி ஜூகர்பெர்க்குடன் ஆலோசனை செய்தார்.
பின்னர் இருவரும் சமூக வலைபின்னல் மற்றும் முக்கிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசித்தனர். சுகாதாரம் மற்றும் கல்விப் பணிகளில் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக, மோடியிடம் ஜூகர்பெர்க் தெரிவித்தார்.
இருவரின் சந்திப்பின் போது, ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பான அப்ளிகேஷன் ஒன்றினை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக, ஜூகர்பெர்க் பின்னர் தெரிவித்தார். அவருடனான சந்திப்பு, பயனுள்ளதாக இருந்ததாக டுவிட்டரில் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
முதன் முறையாக இந்தியா வந்துள்ள ஜூகர்பெர்க், மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இணைய பேஸ்புக் ஆர்வமாக இருப்பதாக ஜூகர்பெர்க் கூறினார். இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் மேலாக உள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/ZU8Sf5″ standard=”http://www.youtube.com/v/QOWINz7yOHk?fs=1″ vars=”ytid=QOWINz7yOHk&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4865″ /]