ராம்கோபால் வர்மா மன்னிப்பு கேட்கவேண்டும். ஸ்ரீதேவியின் வக்கீல் நோட்டீஸ்

srideviபிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘சாவித்திரி’ என்ற பெயரில் ஒருபடம் இயக்கி திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியது. 30 வயது ஆசிரியைக்கும் 15 வயது மாணவனுக்கும் இடையே உள்ள உறவு குறித்த கதை என்பதால் ஆசிரியை தொழிலை அவமதித்ததாக இயக்குனர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலயில் பிரபல தெலுங்கு  தயாரிப்பாளர் ‘சாவித்திரி’ என்ற பெயரை தான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதே பெயரில் ராம்கோபால் வர்மா திரைப்படம் எடுத்தது சட்டப்படி தவறு என்று புகார் தெரிவித்தார். இந்த தயாரிப்பாளரின் எதிர்ப்பு காரணமாகவும், பெண்கள் அமைப்பினர் செய்த போராட்டம் காரணமாகவும் ராம்கோபால் வர்மா சாவித்திரி படத்தின் பெயரை மாற்றி ஸ்ரீதேவி என்று மாற்றினார். ஆனால் இந்த பெயரை தன்னுடையது என்றும் தன்னுடைய பெயரை அனுமதியில்லாமல் பயன்படுத்தக்கூடாது என பிரபல நடிகை ஸ்ரீதேவி இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

அவர் ராம்கோபால் வர்மாவுக்கு அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: நான் குழந்தையாக இருந்தே படங்களில் நடித்து வருகிறேன். பல மொழிப் படங்களில் நடித்து உள்ளேன். எனது நடிப்புக்காக அரசு சார்பில் பல விருதினை பெற்று உள்ளேன். அதோடு படத்தின் புதிய பெயரை எனக்கு தெரிவிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளையும் விதித்து உள்ளார்.

எனக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். உங்களது ஆபாச படத்துக்கு எனது பெயரை பயன்படுத்தி இருப்பதாக அறிந்தேன். இதனால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நோட்டீசு கிடைத்த 3 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இல்லையேல் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதோடு பெயரை மாற்றியதற்கான எழுத்துபூர்வமான உறுதிமொழி அளிக்க வேண்டும். எனது பெயரை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த நோட்டீசு குறித்து விளக்கம் அளிக்க ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடம் ராம்கோபால் வர்மா தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply