மலாலாவுக்கு நோபல் பரிசு கொடுக்க தலிபான்கள் எதிர்ப்பு.

malalaபெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு நோபல் பரிசு கொடுக்க தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவை சேர்ந்த சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானவுடன் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு, தலிபான் பயங்கரவாத அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மலாலாவை மிக மோசமாக விமர்சித்துள்ள தலிபான் தீவிரவாத இயக்கம் “நம்பிக்கை இல்லாதவர்களின் ஒரு முகவர்” என்று கூறியுள்ளது.

டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள தலிபான் தீவிரவாத அமைப்பின், துணை அமைப்பான ஜமாத் உல் அஹ்ரார், ”மலாலா துப்பாக்கி மற்றும் ஆயுத மோதல்களுக்கு எதிராக பேசி வருகிறார். நோபல் பரிசின் நிறுவனர் வெடிப்பொருட்கள் தயாரிப்பாளர் என்பது அவர், அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு தலிபான்களின் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு உள்ளான மலாலா, அதன்பின்னர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அவரது பெயரில் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து தற்போது அதன்மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா, கென்யா நாடுகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வருகிறார்.

Leave a Reply