ஹூட் ஹூட் புயல் எதிரொலி: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 3 வது போட்டி ரத்து.

cricketஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே, விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஹூட் ஹூட் புயல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஏற்கனவே நடந்த முடிந்த இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர், நான்கு போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 17ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும். அதன்பின்னர் கொல்கத்தாவில் கடைசி ஒருநாள் போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெறும்.

மேலும் இந்திய அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக, அந்நாட்டு வீரர்களுக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேப்டன் பிராவோ-வின் சம்பளத்தில் 40 சதவிகிதமும், மற்ற வீரர்களின் சம்பளத்தில் இருந்து 20 சதவிகிதமும் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply