ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர் 16ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள இந்தியவின் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 6.32 மணிக்கு தொடங்கியது.
கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ஏவப்பட இருந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி என்ற செயற்கைக்கோள் வரும் 16ஆம் தேதி விண்ணில் பாய இருக்கின்றது. இந்திய விஞ்ஞானிகள் அதற்கான கவுண்ட் டவுனை இன்று முதல் தொடங்கி வைத்தனர்.
இந்திய கடலோர பகுதிகளை கண்காணித்தல் போன்ற முக்கிய பணிகளுக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. மேலும் இந்தியாவின் பல்வேறு தொழிற் நுட்ப தேவைகளுக்கு பயன்படும் வகையில் 7 செயற்கை கோள்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி புவி இருப்பிட அமைப்பை அறிந்து கொள்வதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1 ஏ மற்றும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1 பி ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை ஏற்கனவே இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பியது.
தற்போது 3-வதாக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1 சி செயற்கை கோள், பி.எஸ்.எல்.வி. சி 26 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.