ஜெயலலிதா ஜாமீன் மனு 17ஆம் தேதி விசாரணை. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு.

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போது  பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவருடைய ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள சுப்ரீம் கோர்ட், வரும் 17ஆம் தேதி ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கபட்டதை அடுத்து,  ஜாமீன் கேட்டு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் சிக்ரி, லோகூர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா சார்பில் பாலின் நரிமன் ஆஜராகி, மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் 17ஆம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனர். பெங்களூரு சிறையில் இன்றுடன் 17வது நாளாக இருக்கும் ஜெயலலிதாவுக்கு அக்டோபர் 17ஆம் தேதி ஜாமீன் கிடைக்குமா? என்பதை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply