இந்த துறையின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய். இது 2016ம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இ – காமர்ஸ் துறையில் சுமார் 200 புதிய நிறுவனங்களில் பல்வேறு பிரைவேட் ஈக்விட்டி மற்றும் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
தற்போது ஃபிளிப்கார்ட், அமேசான், இபே போன்ற நிறுவனங்கள் பணியாளர்களை பிட்ஸ் பிலானி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து எடுத்து வருகின்றன. இதனுடைய சதவிகிதம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்த துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளமும் வருடத்துக்கு 10-40 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. ஆண்டு சம்பளம் 10 – 23 லட்சம் ரூபாய் என்கிற நிலையில் உள்ளது. சீனியர் மற்றும் நடுநிலை ஊழியர்களுக்கு வருடத்துக்கு 10-15 லட்சம் ரூபாய் சம்பளமாக உள்ளது.