ரூ.2000 கோடி புயல் நிவாரண நிதி தேவை. பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

chandrababu naiduஆந்திராவை தாக்கிய ஹூட் ஹூட் புயலால் பல கோடி ரூபாய் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,  நிவாரண உதவியாக முதல்கட்டமாக ரூ.2000 கோடியை ஆந்திர அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ஆந்திர மாநிஅல் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஹூட் ஹூட் புயல் கடுமையாக தாக்கியவுடன் பிரதமர் நரேந்திரமோடியுடன் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு  ‘புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் ம், சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேசி நிலைமையை விளக்கினார். இருவரும் தகுந்த உதவிகளை செய்வதாக சந்திரபாபு நாயுடுவிடம் உறுதி கூறியுள்ளனர்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஹூட் ஹூட் புயல் காரணமாக ஆந்திர அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் குறைந்து இருப்பதாகவும், ஆனாலும் பொருள் சேத மதிப்பு கணக்கிட முடியாத நிலையில் உள்ளது என்றும்  எனவே உடனடியாக மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.2000 கோடி வழங்க வேண்டும் என்று தான் கடிதம் மூலம் பிரதமரிடம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply