இரண்டே நிமிடங்களில் செல்போன் சார்ஜ். சிங்கப்பூர் விஞ்ஞானியின் அரிய கண்டுபிடிப்பு.

rechargeஇரண்டே நிமிடங்களில் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் பேட்டரியை சிங்கப்பூர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சார்ஜ் செய்யப்படும் பேட்டரிகளின் ஆயுள் இருபது வருடங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை துணைப் பேராசிரியர் சென் ஜியாடாங் அவர்கள்தான் இந்த அரிய கண்டுபிடிப்புக்கு காரணமானவர். அவர் தனது கண்டுபிடிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:”

நாங்கள் உருவாக்கியுள்ள இந்த பேட்டரி மூலம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனங்கள் பயன்பெறும். செல்போன் முதல் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் வரை, இதன் மூலம் சார்ஜ் செய்யலாம்.

சார்ஜ் செய்யத் தக்க லித்தியம்-அயன் பேட்டரிகளின் சராசரி ஆயுள் 500 ரீசார்ஜ்களாகும். அதாவது, சராசரியாக 500 முறை சார்ஜ் செய்ய முடியும். கால அளவில் கூற வேண்டுமானால், தினமும் இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தாலும் இதன் ஆயுட்காலம் இருபது ஆண்டுகள் இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு.

இப்போதைய பேட்டரிகளில் உள்ள கிராஃபைட்டுக்கு பதிலாக, டைட்டேனியம் டையாக்ûஸட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மனித உடலிலுள்ள முடியின் பருமனில், ஆயிரத்தில் ஒரு பங்காக இதனைச் சிறிதாகத் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளோம்.

வேதியியல் அடிப்படையில் இது வேகமாகச் செயலாற்ற வல்லது என்பதால், இதனைப் பயன்படுத்தும் பேட்டரியின் ரீசார்ஜ் மிக வேகமாக நிகழ்கிறது. மேலும் இதன் ரீசார்ஜ் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கும். இதன் ஆயுள் 20 ஆண்டுகளாக இருக்க முடியும். அடிக்கடி பேட்டரி சார்ஜ் செய்வது, ஆயுள் தீர்ந்துவிடும் காரணத்தால் பேட்டரியை மாற்றுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

ஆயுள் தீர்ந்த பேட்டரிகளால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் மாசு குறையும். அடுத்த 2 ஆண்டுகளில் இது விற்பனைக்கு வரக் கூடும் என அவர் கூறினார்.

Leave a Reply