இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: மும்பை சிட்டி எப்.சி அணி கேப்டன் காயம்.

footballஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள மும்பை சிட்டி எப்.சி. அணியின் கேப்டன் சையது ரம் நபி, அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் விளையாடிய  போது இடது கணுக்காலில்  ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

காயம் அடைந்த இடத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் தசை நார் கிழிந்து இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நபி அடுத்த 3 வாரத்துக்கு போட்டிகளில் விளையாட முடியாது. இது மும்பை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Leave a Reply