தோஷங்களை வலுவிழக்க செய்யும் ஸ்ரீராகு கவச ஸ்தோத்திரம்

raaguஜாதகத்தில் ராகு நீசனாகவோ, புத்திர ஸ்தானம் முதலானவற்றில் தோஷம் உள்ளவராகவோ, கோசார ரீதியாக 4, 9 ஆகிய இடங்களில், கெடுபலன்களுக்குக் காரணமாகும் நிலையிலோ இருந்தால்… அத்தகைய கெடு பலன்களும் தோஷங்களும் வலு குறைந்து, ராகுவின் அருளைப் பெற, ஸ்ரீராகு கவச ஸ்தோத்திரம்  உதவும். அதன் தியானப் பகுதி இங்கே உங்களுக்காக…

ப்ரணமாமி ஸதா ராஹும் ஸர்பாகாரம் கிரீடினம்
ஸைம்ஹிகேயம் கராளாஸ்யாம் பக்தானாமபய ப்ரதம்
ராஹும் சதுர்புஜம் சர்மஸூலகட்கவராங்கிதம்
க்ருஷ்ணமால்யாம்பரதரம் க்ருஷ்ணகந்தானுலேபனம்
கோமேதகவிபூஷம் ச விசித்ர மகுடாந்விதம்
க்ருஷ்ணஸிம்ஹரதம் மேரும் யாந்தம் சைவாஸ ப்ரதக்ஷிணம்

கருத்து: ஸ்ரீகிரீடத்தைத் தரிப்பவரும், சர்ப்பத்தின் ஆக்ருதியைக் கொண்டவரும், ஸிம்ஹிகையின் புத்திரரும், பயங்கரமான முகத்தைக் கொண்டவரும், பக்தர்களுக்கு பயமின்மையை அளிப்பவரும், கேடயம், சூலம், கத்தி, வரம் ஆகியவற்றைக் கொண்ட நான்கு கரங்களுடன் திகழ்பவரும், கறுத்த மாலைகள், வஸ்திரம் ஆகியவற்றைத் தரித்திருப்பவரும், சந்தனம் பூசியவரும், கோமேதகத்தால் அலங்கரிக்கப்பட்டவரும், ஆச்சரியமான மகுடத் தோடு கூடியவரும், கருமையான சிம்ம ரதத்தைக் கொண்டவரும், மேரு மலையை இடமாகச் சுற்றி வருபவருமான ஸ்ரீராகுவை வணங்குகிறேன்.

Leave a Reply