சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்று கூறியதற்காக கவர்னருக்கு கிடைத்த பரிசு என்ன? கருணாநிதி கேள்வி

governor
திமுக தலைவர் கருணாநிதி தமிழக ஆளுனருக்கு எழுப்பிய கேள்வி ஒன்றில், ‘ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு கொலைகள் நடந்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்று அவர் அரசை பாராட்டியதன் மர்மம் என்ன என்பதை அவரே விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று முன் தினம் திருவள்ளூர் அருகே அமைச்சர் ரமணாவின் தம்பி ரவி அவரது கட்சிக்காரர்களாலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கோவையில் மூதாட்டிகள் இருவர் நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை அம்பத்தூர் அருகே தமிழ்மணி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ராமநாதபுரத்தில் சையது முகமது என்பவர் காவல் நிலையத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள கருணாநிதி, தமிழகத்தின் நிலைமை இவ்வாறு இருக்கும்போது கவர்னர் தன்னுடைய அறிக்கையில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது என்று கூறியதற்கு கிடைத்த பரிசு என்ன என்பதை அவர் விளக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரற்ற நிலையில் இருப்பதாகவும், ஆனால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது என்று சொல்வதற்காக ஆளுனர் லஞ்சம் பெற்றுள்ளார் என்ற அர்த்தத்துடன் கருணாநிதி கூறிய கருத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply