விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் கதை இண்டர்நெட்டில் லீக் ஆனதாக கத்தி படத்தில் பணிபுரிந்த ஒருவர் நேற்று மாலை ஃபேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா என்று உறுதிபடுத்துவதற்கு முன்னர் பல இணையதளங்களில் இந்த செய்தி படுவேகமாக பரவி வருகிறது என கூறப்படுகிறது.
பன்னாட்டு நிறுவனம் ஒன்று கொல்கத்தா அருகே புதியதாக நிறுவனம் தொடங்குகிறது. அந்த நிறுவனத்தின் தேவைக்காக நிலத்தடி நீரை அதிக அளவு உறிஞ்சுகிறது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதால் அந்த கிராம மக்கள் பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக போராடுகின்றனர். அதற்கு கதிரேசன் என்பவர் தலைமை தாங்குகிறார். ஆனால் அந்த நிறுவனம் விஜய்யை தந்திரமாக ஒரு வழக்கில் சிக்கவைத்து ஜெயிலுக்கு தள்ளி விடுகிறது. ஜெயிலில் தன்னை போலவே உருவ ஒற்றுமையுள்ள ஜெகதீஷை பார்க்கிறார் கதிரேசன். தனது கிராமத்திற்கு நேர்ந்த கதியையும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பையும் ஜெகதீஷிடம் சொல்கிறார் கதிரேசன்.
இந்நிலையில் விடுதலை ஆகி செல்லும் ஜெகதீசன், நேராக அந்த கிராமத்திற்கு கதிரேசனாக சென்று பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறார். பின்னர் கிராம மக்களின் உதவியுடன் அந்த நிறுவனத்தை எப்படி அந்த கிராமத்தில் இருந்து விரட்டினார் என்பதுதான் கிளைமாக்ஸ்.
இதுதான் தற்போது இண்டர்நெட்டில் வெளியாகியுள்ள கத்தி படத்தின் கதை. இதில் கதிரேசன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இரண்டு வேடங்களில் விஜய்யும் கதிரேசன் காதலியாக சமந்தாவும் நடிக்கிறார். பன்னாட்டு நிறுவன உரிமையாளராக நிதின் முகேஷ் நடிக்கின்றார். மேலும் இதில் வரும் ஜெகதீஷ் என்ற கேரக்டர் துப்பாக்கி படத்தில் வரும் ஜெகதீஷ் என்ற டுவிஸ்ட்டும் படத்தில் உண்டு.
இந்த கதை உண்மையில் கத்தி கதைதானா? அல்லது இண்டர்நெட்டில் யாராவது கிளப்பிவிட்ட கதையா? என்பது உறுதியாக தெரியவில்லை. இப்போதைக்கு இந்த கதை மிகவேகமாக ஃபேஸ்புக், டுவிட்டர்களில் பரவி வருகிறது. உண்மையான கதை என்ன என்பது அக்டோபர் 22ஆம் தேதிதான் தெரியவரும்.