குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இயங்கி வந்த ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீரென”சீல்’ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
ஆம் ஆத்மி அலுவலகம் இயங்கி வந்த வர்த்தகக் கட்டடத்தின் உரிமையாளர் ரூ.75 லட்சம் வாடகை பாக்கியைக் கட்டாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆமதாபாத் நகராட்சி அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியபோது:
உள்ளாட்சி அமைப்புக சட்டத்திட்டங்களுக்கு உள்பட்டே ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது, ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.