நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு. 30 பேர் பலி.

avalancheநேபாளத்தில், இமயமலை பகுதியில் ஏற்பட்ட பயங்அக்ர பனிச் சரிவில் சிக்கி 3 இந்தியர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த மேலும் 14 ஆஸ்திரேலியர்களை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. அவர்க்ளை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பனிச் சரிவுக்குப் பிறகு, ஆஸ்திரேலியர்களான 14 பேரையும் இரண்டு நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்த புகாரை அடுத்துதான் அவர்கள் பனிச்சரிவில் காணாமல் போனது தெரியவந்தது.

இகுறித்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பனிச் சரிவால் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்குள்ள நிலவரம் குறித்து ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் நேபாள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பனிச் சரிவில் சிக்கி ஆஸ்திரேலியர் எவரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் இல்லை . எனவே காணாமல் போன ஆஸ்திரேலியர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது, என்று கூறியுள்ளார்.

இதனிடையே, நேபாள போலீஸார் கூறுகையில், “”பனிச் சரிவில் சிக்கிய 161 பேர்களை இதுவரை மீட்டுள்ளதாகவும்,  அவர்களில் இருவர் ஆஸ்திரேலியர்கள்” என்று தெரிவித்தனர்.

Leave a Reply