இன்றைய ராசிபலன். 18/10/2014

astrologyமேஷம்
இன்றைய தினம் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய யோசனைகள் பிறக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
கடகம்
இரவு 7 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். இரவு 7 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
தனுசு
இரவு 7 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்ததன்மையையே பின்பற்றுவது நல்லது. திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மகரம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு 7 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
மீனம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

Leave a Reply