22 நாட்களில் ஜாமீன் பெற்றவர் ஜெயலலிதா ஒருவரே.

jayalalitha bailஜெயலலிதாவுக்கு முன்னதாக ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மாதக்கணக்கில் சிறையில் இருந்து பின்னர்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஆனால் ஜெயலலிதா 22 நாட்களில் ஜாமீனில் வெளியே வரவிருக்கின்றார். மேலும் மற்ற அரசியல்வாதிகள் தண்டனை பெற்ற போதும், ஜாமீன் கேட்டபோது, அதை ஒரு செய்தியாகவே கண்டுகொள்ளாத அகில இந்திய ஊடகங்கள் ஜெயலலிதா சிறைவாசத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வந்தன.

லல்லு பிரசாத் யாதவ், 70 நாட்கள் சிறையில் இருந்து கடுமையாக போராடிய பிறகே ஜாமீன் பெற்றார்.

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, 2 மாதங்கள் சிறையில் இருந்து ஜாமீன் பெற்றார். ஆனால் அந்த ஜாமீனும் தற்போது கேன்சல் ஆகி மீண்டும் சிறை சென்றுவிட்டார்.

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரும் 16 மாதங்கள் சிறையில் இருந்த பின்னரே விடுதலையானார்.

அதேபோல் இன்னொரு ஆந்திர தலைவரான ஜனார்த்தன ரெட்டி கடந்த இரண்டு வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

2ஜி வழக்கில் சிறை சென்ற கனிமொழி 160 நாட்கள் சிறையில் இருந்தபின்னர்தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவருடன் கைதான ஆ.ராசா, 15 மாதங்கள் காத்திருந்து ஜாமீன் பெற்றார்.

எனவே இந்தியாவிலேயே வெறும் 22 நாட்களில் ஜாமீன் பெற்ற ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply