சம்பளப் பிரச்னை காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரை ரத்து செய்வதாக மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் நேற்று திடீரென அறிவித்திருந்தது. இதனால் கொல்கத்தாவில் வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஐந்தாவது ஒருநாள் போட்டி ரத்தானது.
மேலும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து நடைபெற இருந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.
மேற்கிந்திய தீவு அணி வீரர்களின் சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக வரும் 21ஆம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
போட்டிகள் ரத்து செய்யப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், ரசிகர்களிடம் மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது,. ஆனால் போட்டிகள் ரத்தானதால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற இந்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்கோர் விபரம்:
இந்தியா 330/6 50 ஓவர்கள் விராத் கோஹ்லி 127, ரெய்னா 78,
மேற்கிந்திய தீவுகள்” 271/10 48.1 ஓவர்கள். சாமுவேல் 122 ரன்கள்