விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை விலக்கி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்ய இலங்கை அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.
இலங்கையில் தமிழர்களின் அமைப்பான விடுதலைப்புலிகள் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடினர். இந்த இயக்கத்துக்கு இந்தியா உள்பட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை, ஆகிய நாடுகள் தடை விதித்தன.
இந்நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், லக்சம்பர்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய யூனியன் விதித்த தடையை நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீர்ப்பு மூன்று மாதங்களுக்கு பின்னர் நடைமுறைக்கு வரும் என அந்த தீர்ப்பு தெரிவித்தது.
ஐரோபிய யூனியன் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய அவரது அரசுஇ தீர்மானித்திருக்கிறது.