கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் முதலில் இசையமைப்பாளராகவும், பாடகியாகவும் அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக மாறிவிட்டார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஒருசில படங்களில் பாடிக்கொண்டும் இருக்கின்றார்.
இந்நிலையில் கமலின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் நடிக்கும் “ஷமிதாப்” என்ற படத்திற்காக ஸ்ருதிஹாசன் ஒரு ஹிந்துஸ்தானி பாடலை பாட முடிவு செய்துள்ளார். தங்கைக்காக தனது பிசியான ஷெட்யூலிலும் நேரம் ஒதுக்கி பாட்டு பாட முடிவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசனை இயக்குனர் பால்கி பெரிதும் பாராட்டியுள்ளார். ஷமிதாப் படத்தில் தனுஷ், அக்ஷராஹாசன், அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதிஹாசன் ஏற்கனவே இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவுக்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இவர் பாடும் 2-வது பாடல் இதுவாகும்.