விஜய்,சமந்தா நடிப்பில் உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ள கத்தி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளிவருமா? என்ற சந்தேகத்தில் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் தனது அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திரையுலக பிரபலங்களை கத்திக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று தனக்கு வந்த நிலைமை நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதால், இந்த பிரச்சனைக்கு திரையுலகினர் ஒன்றுசேர்ந்து ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும் என்று அவரே களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் அதிரடி முயற்சியால் நேற்று விஷால், கத்திக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். கத்தி படத்தினை வெளியிட தியேட்டர் அதிபர்கள் முன்வரவில்லை என்றால் தனது பூஜை திரைப்படமும் வெளிவராது என்று அவர் அதிரடியாக தியேட்டர் அதிபர்களிடமும், விநியோகிஸ்தர்களிடம் கூறியதாக தெரிகிறது.
மேலும் விஷால் மட்டுமின்றி அஜீத், ரஜினி, கமல் ஆகியோர்களும் இன்று விஜய்க்கு ஆதரவாக நேரடியாக களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். தமிழ் அமைப்பினர் என்ற போர்வையில் சென்சார் அனுமதியளித்த ஒரு திரைப்படத்தை வெளியிட தடை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
விஜய்யின் இந்த புதிய முயற்சியை திரையுலகினர்களும் ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். திரையுலகின் முக்கிய பிரபலங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் விஜய் வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூறப்படுகிறது