விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் பெரும் எதிர்பார்ப்போடு தீபாவளி தினத்தில் வெளியானது. இந்நிலையில்
கேரள மாநிலம் பாலக்காட்டில் கத்தி திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டத்தின் போது திரையரங்கம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் கட் அவுட் மேலிருந்து கீழே விழுந்து ரசிகர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
இது தொடர்பாக கேரள காவல்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயாபாரத் திரையரங்கு முன்பு, வைக்கப்பட்ட விஜயின் கட் அவுட் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்யும் போது இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து பலியானார்.
அவரின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தவர். விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர்.