நியூயார்க் மருத்துவருக்கும் எபோலா நோய். அமெரிக்க மக்கள் பெரும் பீதி.

ebolaஎபோலா நோய் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு எபோலா நோயின் வைரஸ் பரவியதால் அமெரிக்கா மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் நகரைச் சேர்ந்த டாக்டர் கிரேக் ஸ்பென்சர் என்பவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை  ஒன்றில் கடந்த சில வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் எபோலா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில், கிரேக் ஸ்பென்சருக்கு திடீரென காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பிற மருத்துவர்கள் அவரை சோதனை செய்தனர். இந்த சொதனையில் டாக்டர் கிரேக் ஸ்பென்சருக்கு எபோலா நோய் வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை   தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவர் வட்டாரங்களும் பொதுமக்களும் கடும் பீதியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக நியூயார்க் நகர மேயர் பில்.டி.பிலசியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மருத்துவர் ஸ்பென்செர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.  சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.  நியூயார்க் உலகத் தரத்திலான மருத்துவ வசதி உள்ள நகரம் என்றாலும், இந்த நோயைப் பொறுத்தவரை தனியார் நிறுவனங்களும் மருத்துவ உதவி செய்வது தற்போது தேவைப்படுகிறது” என்றார்.

Leave a Reply