அருணாச்சல பிரதேச எல்லையில் 54 புதிய ராணுவ முகாம்கள். ராஜ்நாத் சிங் அறிவிப்பு.

rajnath singhஅருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள சீன நாட்டின் எல்லைப்பகுதியில், 54 புதிய ராணுவ முகாம்களை அமைப்பது என மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு சுமார் 175 கோடி ரூபாய் ஒதுக்கியதோடு, அந்த பகுதியில் கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நொய்டா பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “எல்லைப் பிரச்னையைப் பொறுத்தவரை சீனாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து அத்துமீறி வருவது வேதனையளிக்கிறது.  அமைதியை நிலைநாட்டுவதற்காக கௌரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது” என்று பேசினார்.

மேலும் “ஒவ்வொரு மனிதனுக்கும் இறுதியான வெற்றி கவுரவம் தான், இருப்பினும் அண்டை நாடுகளுடன் இந்தியா சகோதரத்துவத்தையே விரும்புவதாக பிரதமர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்” என்று அவர் தனது  உரையில் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply