இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து போட்டியின் முக்கிய போட்டி ஒன்று கடந்த 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் அமிதப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனுக்கு சொந்தமான சென்னையின் எப்.சி அணி, சச்சின் தெண்டுல்கருக்கு சொந்தமான கேரளா பிளாஸ்டர் எப்.சி என்ற அணியுடன் மோதியது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னையின் எப்.சி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்திருந்தார். அவரை அமிதாப்பச்சன், சச்சின் தெண்டுல்கர், அபிஷேக் பச்சன் ஆகியோர் வரவேற்றனர்.
இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியின் இறுதிவரை இருந்து ரசித்து பார்த்த ரஜினிகாந்த், சென்னை அணி கோல்போட்ட போது கைதட்டி அணியினருக்கு உற்சாகம் அளித்தார். வெற்றி பெற்ற சென்னையின் எப்.சி. அணிக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த், அணி உரிமையாளர் அபிஷேக் பச்சனையும் பாராட்டினார். இந்த போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.