தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கத்தி’ திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பலத்த போட்டி நிலவி வருவதாகவும், ரீமேக் உரிமை குறித்த வியாபாரத்தை லைகா நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் கத்தியை ரீமேக் செய்ய வேண்டாம் என்றும், அப்படியே தெலுங்கில் டப் செய்து வெளியிடலாம் என்று விஜய் ஆலோசனை கூறியதாகவும் பத்திரிகை செய்தி ஒன்று கூறுகிறது.
தென்னிந்திய திரைப்படங்களிலேயே முதல் நாள் வசூ. ரூ.23.80 கோடி வசூலான முதல் திரைப்படம் ‘கத்தி’ தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பவன் கல்யாண் உள்பட பல தெலுங்கு நட்சத்திரங்கள் போட்டி போட்டு வருகின்றனர். கத்தி தெலுங்கு ரீமேக் உரிமையை விற்று அதில் கணிசமான ஒரு தொகையை சம்பாதிக்க லகா நிறுவனமும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கத்தி படத்தின் தயாரிப்பாளரிடம் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை யாருக்கும் விற்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக தெலுங்கில் இந்த படத்தை டப் செய்து வெளியிட்டாலே நல்ல வசூல் கிடைக்கும் என்று விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸ் தரப்பில் கோரிக்கை விடுத்ததாகவும் தெலுங்கு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கத்தியை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டால் தெலுங்கு மார்க்கெட்டையும் பிடிக்கலாம் என்பது விஜய்யின் எண்ணம் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் லைகா நிறுவனம் விஜய்யின் கோரிக்கையை ஏற்குமா அல்லது ரீமேக் உரிமையை விற்பனை செய்யுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.