44-வது உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது. இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில், முதல் 8 இடங்களை வகித்த வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மிகவும் விறுவிறுப்பாக கடந்த ஒருவாரமாக நடைபெற்ற இந்த போட்டியில் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹலேப் என்ற வீராங்கனையுடன் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்டில் ஹலேப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த ஆட்டம் 1 மணி 9 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. இந்த வெற்றியின் மூலம் லீக் போட்டியில் ஹலேப்பிடம் நேர் செட்டில் அடைந்த செரீனா பழிதீர்த்துக் கொண்டார்.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அதிக முறை பட்டம் வென்ற மார்ட்டினா நவரத்திலோவா, , ஸ்டெபி கிராப்புடன் ஆகியோர்களுக்கு அடுத்த இடத்தை செரீனா பெற்றுள்ளார். மேலும் சாம்பியன் பட்டம் பெற்ற செரீனாவுக்கு ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.