தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கேப்டன் சென்சோ மெய்வா, நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகன்ஸ்பர்க் அருகே உள்ள வாஸ்லூரஸ் என்ற இடத்தில் வசித்து வந்த சென்சோ மெய்வாவை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென அவருடைய வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டிக்கொன்றனர். சென்சோ சுடப்படும்போது மூன்றாவது நபர் ஒருவர் அவருடைய வீட்டு வாசலில் துப்பாக்கியுடன் நின்றதாக கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கேப்டன் சென்சோ மெய்வா சமீபத்தில் பிரபல நடிகை ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவருடைய வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடர்களே அவரை சுட்டுகொன்றதாக தென்னாப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தென்னாப்பிரிக்க போலீஸார் தேடி வருகின்றனர்.