விரைவில் அறிமுகமாகும் ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கீரீன்’ விமானம்.

   touch screen plain 3  உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கீரீன்’ விமானம்  விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் நவீன தொழில்நுட்பம் மூலம் வடிவமைத்திருக்கும் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்த்து ரசிக்கலாம். வானத்தையும், பூமியையும் தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான ஜன்னல்களுக்கு பதில் முழு நீள டச் ஸ்கிரீன்கள் பொருத்தப்பட்டுள்ளது.

touch screen plain 1

பயணிகள் தங்கள்து வசதிகளுக்கு ஏற்ப அந்த டச் ஸ்கீரீனை டச் செய்து வானத்தையும் பூமியையும் பார்க்கலாம். விமானத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள நவீன டெக்னாலஜியின் அமைந்த கேமிராக்கள் மூலம் ஹை-டெபனீஷன் தரத்தில் தெளிவாக விரும்பிய ஆங்கிளில் வெளியில் உள்ள காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மேலும், பயணிகள் வெளியில் தெரியும் காட்சிகளை தாங்களாகவே பிரைட்னெஸ் மற்றும் கான்ட்ராஸ்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் இந்த விமானத்தில் உள்ளது.  மேலும் இயற்கை காட்சிகளை பார்க்க இயலாத சூழ்நிலையில் அழகிய வால்பேப்பர்கள் தோன்றி பயணிகளை மகிழ்விக்கும்.

touch screen plain

ஓ.எல்.இ.டி. டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மெல்லிய கண்ணாடி திரை எடை குறைந்ததும், நன்றாக வளையக்கூடிய தன்மையை உடையது. இந்த திரையை பொருத்துவதால் விமானத்தின் எடையும் கணிசமாக குறைவதோடு எரிபொருளையும் கணிசமாக சேமிக்க உதவுகிறது.  இந்த புதிய டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறும், செலவையும் குறைக்கும் தன்மையுடையது என்பதால் அடுத்த தலைமுறைக்கான விமானமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

touch screen plain 4

மேலும் இந்த புதிய டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் எவ்வளவு காற்று அழுத்தம் ஏற்பட்டாலும் உடையாமல் பயணிகளையும் விமானத்தையும் காக்கும் தன்மை கொண்டது.

சி.பி.ஐ. எனப்படும் இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில் சோதனைக்கு வரும் என ஆராயச்சியாளர் சைமன் ஓகியர் தெரிவித்தார்.

touch screen plain 2

Leave a Reply