6 வங்கிகளின் தலைவர்களை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து இன்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர்கள் நியமனம் தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. அதன் பிறகு மத்திய அரசு அந்த குழுவின் சிபாரிசினை பரிசீலித்து வங்கி தலைவர்களை நியமனம் செய்கிறது. இந்நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட 6 வங்கிகளின் தலைவர்களை மத்திய அரசு அதிரடியாக நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளது.
கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க், விஜயா வங்கி ஆகிய 6 வங்கிகளின் தலைவர்கள் நியமனத்தை மத்திய அரசு ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இனி வங்கி தலைவர்கள் நியமனத்தில் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய முறைப்படி காலியாக உள்ள 8 வங்கி தலைவர்கள் மற்றும் 14 நிர்வாக இயக்குனர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி இந்த புதிய தேர்வுக்குழுவில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.