சென்னையில் 5 இடங்களில் அம்மா திரையரங்குகள். தமிழக அரசு அறிவிப்பு.

 amma theatreசென்னையில் ஐந்து இடங்களில் அம்மா திரையரங்குகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அந்த திரையரங்குகளில் ஒரே நேரத்தி்ல் 250 பேர் படம் பார்க்கும் வசதியுடன் திரையரங்குகள் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் திரையரங்குகள் கட்டுவதற்கான இடங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

1. புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய மண்டல அலுவலகம்-3 இருந்த இடம்
2. மின்ட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கிடங்கு இருந்த பகுதி
3.வளசரவாக்கத்தில் குடிநீர் வாரியம் பம்பு செட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம்
4.கோடம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான யூனிட் அலுவலகம்
5. கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம்

மேற்கண்ட ஐந்து இடங்களிலும் முதல்கட்டமாக அம்மா திரையரங்கம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இவற்றில் தனியார் ஷாப்பிங் மால்கள் போன்று ஒரே இடத்தில் 4 முதல் 8 திரை அரங்குகள் வரை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்டிட கலை நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு தன்பின்னர் பணிகள் தொடங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களில் கட்டிடம் கட்டும் பணியை தொடங்கவுள்ளதாகவும் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணியை முடித்து ‘அம்மா’ திரையரங்குகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திரையரங்குகளில் சுமார் 250 பேர் வரை அமர்ந்து திரைப்படம் பார்க்க முடியும். மிகக்குறைந்த கட்டணத்தில் நவீன வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட திரையரங்குகளாக அம்மா திரையரங்குகள் அமையும் என கூறப்படுகிறது.

Leave a Reply