மாணவனின் கன்னத்தை கிள்ளி துன்புறுத்திய சென்னை ஆசிரியைக்கு ரூ.50,000 அபராதம்.

Senior Woman Pinching Boy's Cheekசென்னை மாணவனின் கன்னத்தில் அடித்து துன்புறுத்திய ஆசிரியை ஒருவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள கேசரி உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவன் ஒருவனின் கன்னத்தை, அவனது வகுப்பு ஆசிரியை மெஹருன்னிசா பலமாக கிள்ளி தண்டித்துள்ளார்.
 
இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்திடம்  மாணவனின் தாய் ராம்கௌரி,  முறையிட்டதில், மாணவனுக்கு ரூ.1,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து ராம்கௌரி, தனது மகனின் டிசியை தருமாறு கேட்டு பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, பள்ளி நிர்வாகம் டிசியை கொடுக்காமல் அவரை அலைகழித்தது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த ராம்கௌரி, சைதாப்பேட்டை  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு காரணமாக ராம்கௌரிக்கு பள்ளி நிர்வாகம் பல்வேறு விதத்தில் நெருக்கடிகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ராம்கௌரி,  சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அவர் தொடர்ந்த  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கௌல் மற்றும் நீதிபதி சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவனைத்  துன்புறுத்திய ஆசிரியருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.

அதே சமயம் ஆசிரியை  மீதுள்ள குற்றவியல் வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள பெற்றோர் முன்வர வேண்டும் என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply