5 தமிழர்களுக்கு தூக்கு? ‘கத்தி’க்கு எதிராக கத்திய தமிழ் அமைப்புகள் எங்கே?

kaththi and tamil protestorsவிஜய் நடித்த கத்தி’ படத்தில் தமிழர்கள் குறித்தோ, தமிழினம் குறித்தோ எவ்விதமான முரண்பாடான காட்சிகளும் இல்லை. ஆனாலும் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நண்பர் என்ற ஒரு காரணத்தை கூறி, பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி இலவச விளம்பரம் தேடிக்கொண்டது.

ஆனால் தற்போது ராஜபக்சே அரசு ஐந்து அப்பாவி தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. ஒரு சாதாரண பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு எதிராக கூக்குரல் போட்ட ஏராளமான தமிழ் அமைப்புகள் இப்போது எங்கே சென்றுவிட்டன என்று தெரியவில்லை.

கத்தி படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் ஒரு பெரிய ஹீரோவை எதிர்க்கின்றோம் என்ற விளம்பரமும் கிடைக்கும், அதே நேரத்தில் போராட்டத்தை வாபஸ் பெற கோடிக்கணக்கில் பணமும் கிடைக்கும். ஆனால் அப்பாவி தமிழர்களுக்கு எதிராக போராடினால் யாரும் பணம் தரமாட்டார்கள். அதுமட்டுமின்றி போலீஸாரின் கைது நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும் என்பதால் அஞ்சு ஒடுங்கிவிட்டதா?

தமிழ் அமைப்புகள் என்ற போர்வையில் இயங்கி வரும் போலியான, சுயநலமுள்ள அமைப்புகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஏராளமானோர் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply