வங்கியில் நமது கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி இனிமேல் மாதம் 5 முறை மட்டுமே இலவசமாக எடுக்க முடியும். அதற்கு மேல் ஏடிஎம் கார்டை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், பணம் இருப்பை அறிவதற்கும் அடிக்கடி தங்களது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை நாம் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் எத்தனை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தினாலும் கட்டணம் ஏதும்இல்லை என்றா நிலை இருந்தது. மற்ற வங்கி ஏ.டி.எம்.களை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் மட்டுமே, கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இனிமேல் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.களிலும் மாதம் ஒன்றுக்கு 5 முறை மட்டுமே இலவசமாக நம்முடைய பணத்தை எடுக்க முடியும். அதற்கு மேல் ஏ.டி.எம் ஐ ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
இந்த விதிமுறை பணம் எடுப்பதற்கு மட்டுமின்றி, பணம் இருப்பு குறித்து அறிவதற்கும் பொருந்தும். 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த விதிமுறை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 பெருநகரங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.வங்கிகளில் கூட்ட நெருக்கடியை குறைப்பதற்காகவே ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுக்கும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. தற்போது இதற்கும் பணம் வசூலிப்பதால் இனி வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்கும் நிலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.