தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம்

evks elangovanதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் திடீரென நேற்று முன் தினம் ராஜினாமா செய்ததை அடுத்து  தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் போட்டியில் முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய செயலாளருமான திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் எம்.பி. மாணிக்தாகூர் ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத நிலையில்  முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், பி.எஸ்.ஞானதேசிகனின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாகவும் புதிய
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,

Leave a Reply