மகாராஷ்ட்ரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.

maharastra cmமகாராஷ்ட்ரா மாநிலத்தின் புதிய  முதல்வராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

 தேவேந்திர பட்னாவிஸ் அவர்களை  தொடர்ந்து பா.ஜனதா உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஏக்நாத் கதாஸ், சுதிர் மொகந்திவார், வினோத் தாவித் முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜ் முண்டே ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். மகாராஷ்டிரா கவர்னர்  வித்யாசாகர் ராவ் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிராமாணமும் செய்துவைத்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற  இந்த பிரமாண்டமான பதவியேற்பு விழாவில், பாரத பிரதமர் மோடி, பா.ஜனதாகட்சித் தலைவர் அமித்ஷா ஆகியோர்  கலந்துகொண்டனர். சிவசேனா தலைவர் உத்தவ்தாக்ரே,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரபுல் பட்டேல் மற்றும் மத்திய அமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

முதலில் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்த உத்தவ் தாக்கரே, பின்னர் பா.ஜனதா தலைவர் அமித் ஷா  அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, விழாவில் கலந்துகொண்டார். ஆனால் அவர் சற்று தாமதமாகத்தான் விழாவுக்கு வந்து, மோடியின் இருக்கையின் அருகே அமர்ந்துகொண்டார்.

முன்னதாக 288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், 122 இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜனதா முதன்முறையாக ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply