தமிழ், இந்தி என இருமொழிகளிலும் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் தனுஷ் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அவருடைய ஆசைக்கு உடனடியாக இயக்குனர் மணிரத்னத்திடம் இருந்து பதில் வந்துள்ளது. இருவரும் இணைந்து மிக விரைவில் ஒரு இந்திப்படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தனுஷ் தற்போது ஷமிதாப், அனேகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் மணிரத்னம் தற்போது தல்கார் சல்மான், நித்யாமேனன் நடிக்கும் ‘ஓகே கண்மணி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இருவரும் தாங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் படங்களின் பணி முடிவடைந்த பின்னர் இந்தி படம் ஒன்றில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல இளம் நடிகை அலியா பட் நடிக்கவுள்ளார்.
இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வரும் 2015ஆம் ஆண்டின் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.