பாரபட்சமின்றி நேர்மையாக செயல்படுவேன். புதிய தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி.

santheep saxenaதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இதுவரை பணிபுரிந்த பிரவீண் குமார், அந்த பணியில் இருந்து அவருக்கு பதிலாக தமிழக வேளாண் துறை முதன்மைச் செயலராக இருந்த சந்தீப் சக்சேனாவை புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சமிபத்தில் மத்திய அரசு நியமனம் செய்தது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட சந்தீப் சக்சேனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது:

“இதுவரை பணிபுரிந்த அனைத்து துறைகளிலும் வளர்ச்சி, முன்னேற்றப் பணிகளை சிறப்பாக செய்தேன். அதேபோல தேர்தல் துறையிலும் சிறப்பாக செயல்படுவேன். தேர்தல்கள் நடத்துவது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள் வது போன்றவற்றில் எந்தவித குழப்பங்கள், புகார்களும் இல்லாதவாறு, பாரபட்சமின்றி, நேர்மையாக, தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டு செயல் படுவேன்.

வாக்காளர் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் முகாம் கள் நடக்கும்போது, அரை மணி நேரம் ஒதுக்கி, தங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா அல்லது வேறு நபர்களின் பெயர் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். முகவரி மாறினால், உரிய திருத்தங்களை தேர்தல் துறைக்கு அளித்து, பட்டியலிலும் அந்த மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவம்பர் 2-ம் தேதி  நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த முகாமுக்குச் சென்று, உரிய ஆவணங்களுடன் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

இணையதளம் வாயிலாகவும் பலர் விண்ணப் பித்துள்ளனர். இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் பெருமளவு எழுத்துப் பிழைகளை தவிர்க்க முடியும். வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் அனைத்து குடிமக்களும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். வாக்காளர்கள் எளிதில் அணுகக்கூடிய, நட்பு ரீதியான துறையாக தேர்தல் துறை செயல்படும். வாக்காளர் அட்டை, பட்டியலில் பிழைகளைத் திருத்த புதிய திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

Leave a Reply