விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் 58 திரைப்படம் வரும் 10ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கவுள்ளனர். பி.டி.செல்வகுமார் தயாரிக்கவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் ஒருசில ஊடகங்களில் விஜய் 59 படம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கவிருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா விஜய் ஜோடியாக வில்லு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கும் விஜய் 59 படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு அட்லியின் திருமணத்திற்கு பின்னர் வெளிவரும் என கூறப்படுகிறது.