ஜப்பான் நாட்டின் மிக உயர்ந்த விருது ஒன்றுக்கு முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஜப்பான் தூதரகம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ”கடந்த 35 ஆண்டுகளாக இந்திய-ஜப்பான் இடையேயான உறவுகளை விரிவாக்கம் செய்யவும், நட்புறவை அதிகரிக்கவும் மன்மோகன் சிங் தனது பதவிக்காலத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தியுள்ளார்.
எனவே, அவருக்கு ஜப்பானின் மிக உயர்ந்த விருதான ”The Grand Cordon of the Order of the Paulownia Flowers’ என்ற விருது வழங்கப்படுகிறது. ஜப்பானின் மிக ‘உயரிய தேசிய விருது’ மற்றும் உயர்ந்த மரியாதை கொண்ட இந்த விருதினை பெரும் முதல் இந்தியர் மன்மோகன் சிங்” என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ”உண்மையிலேயே நான் கவுரவிக்கப்பட்டு இருக்கிறேன். ஜப்பான் மக்கள் மற்றும் அரசாங்கம் என் மீது பொழியும் அன்பு மற்றும் பாசத்திற்கும் பணிகிறேன்” என்றார்.