போதையை ஒழிக்க என்ன வழி? ஆலோசனை வழங்க பிரதமர் வேண்டுகோள்.

modiஅப்பாவி பொதுமக்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் பிரச்சினையை எதிர்கொள்ள யோசனைகளை வரவேற்பதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் ‘மனதில் தோன்றியது’ என்ற நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி போதை பிரச்சினை குறித்து விரிவாக பேசினார்.

இந்நிலையில் நேற்று  மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “மனதில் தோன்றியது நிகழ்ச்சிக்காக வந்த கடிதங்களில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பிரச்சினை குறித்து நான் அடுத்த நிகழ்ச்சியில் பேசுவதாக கூறினேன். இந்தக் கொடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். எனது மைகவ் (MyGov) இணைய தளத்தில் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் தன்னார்வ மற்றும் தொண்டு நிறுவனங்களும் தங்கள் அனுபவங்களை குறிப்பிடலாம்” என்று கூறியுள்ளார்.

‘மனதில் தோன்றியது’ அடுத்த நிகழ்ச்சியில் சமூகப் பிரச்சினைகள் குறித்து பேசுவதாக மோடி கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி 1 மாதத்துக்கு பிறகு மீண்டும் ஒலிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply