ரஷ்ய துணை பிரதமர் – மோடி சந்திப்பு. டிசம்பரில் புதின் இந்தியா வருகை.

russia deputy pm with modi அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோஸினி அவர்கள் நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ரஷ்யா உடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பதாக  கூறினார்.

இந்தியா – ரஷ்யா இடையிலான உயர்மட்ட அளவிலான கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் குழுவுடன் இந்தியா வந்த ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோஸின், நேற்று புதுடெல்லியில் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். பின்னர் இந்தியா -ரஷ்யா அதிகாரிகளுக்கு இடையிலான கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்

rogozini and sushma

இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்கள் பங்கேற்றனர்.  இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனிடையே, பிரதமர் அலுவலககம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வரும் டிசம்பர் மாதம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வர உள்ளதாகவும், அவருடைய வரவை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும், அவரது வருகையால் ரஷ்யாவுடனான உறவு மேலும் வலுப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

russia deputy pm

Leave a Reply