சுவிஸ் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் சமீபத்தில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த நிலையில் அந்த பட்டியலில் இருந்த 289 பேர் அக்கவுண்டில் பணமே இல்லை என்ற திடுக்கிடும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கருப்பு பணம் குறித்ஹ்ட ஒரு பட்டியலை எச்.எஸ்.பி.சி. வங்கியின் ஜெனீவா கிளை இந்தியாவிடம் ஒப்படைத்தது. அந்த பட்டியலில் மொத்தம் 628 பேர்களின் அக்கவுண்ட் விபரங்கள் இருந்தன. மூடி சீலிட்ட உறையில் சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு தாக்கல் செய்த இந்த பட்டியலை விசாரணை நடத்துவதற்காக நேற்று சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. புலனாய்வு குழுவின் விசாரணையில் 628 பேர் பட்டியலில் உள்ள 289 பேர்களின் அக்கவுண்டில் சுத்தமாக பணம் இல்லை என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, 122 பேர்களது பெயர்கள் இரண்டு முறை இடம் பெற்றிருப்பதாகவும், இதில் பெரும்பாலான கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டது என்ற விபரமும், பரிவர்த்தனை குறித்த விபரமும் இல்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.