இலங்கை பிரதமர் முதியன்செவேகே ஜெயரத்னே ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி வந்துள்ளார். திருப்பதி வந்துள்ள இலங்கை பிரதமருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் முதியன்செவேகே ஜெயரத்னே இன்று திருப்பதி வந்துள்ளார். இலங்கை பிரதமரின் வருகையினால் தமிழக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தின் எல்லையான திருத்தணி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே ஆந்திர எல்லைக்கு அனுமதிக்கப்படுகிறது.
இதேபோல், திருமலை திருப்பதி கோவிலை சுற்றியும் ஆந்திர போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெயரத்னே, ஏழுமலையானை தரிசனம் செய்யும் வரை அனைத்து பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர், ரேணிகுண்டாவில் இருந்து தனி விமானத்தில் இலங்கை செல்கிறார் ஜெயரத்னே.